தேர்தல் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு


தேர்தல் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
x
தினத்தந்தி 21 April 2018 12:02 AM GMT (Updated: 21 April 2018 12:02 AM GMT)

தேர்தல் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரசுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.

மும்பை,

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளாக மராட்டியத்தில் ஆட்சியில் இருந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்போது இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்தது. ேதர்தலில் தோல்வி அடைந்த அந்த இருகட்சிகளும், ஆட்சியை பா.ஜனதா- சிவசேனாவிடம் பறிகொடுத்தன.

இதற்கிடையே வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நாந்தெட் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. இதுதவிர பாரிபா பகுஜன் மகாசங்கம், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க உள்ளோம்.

முதல்-மந்திரி கிராமபுறங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது சிரிப்பு மூட்டுவதாக உள்ளது. இன்றைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 40 முதல் 45 ஆயிரம் குடும்பங்கள் கழிவறை வசதிகள் இல்லாமல்தான் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story