பெண் தீக்குளித்து தற்கொலை


பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2018 9:45 PM GMT (Updated: 21 April 2018 7:34 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதனநகரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுதுரை (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு பரணீதரன், சேஷாத்ரி என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமாட்சியம்மாள் (70). உறவு முறையில் இவர் அனிதாவுக்கு பாட்டி முறையாகும். கடந்த சில மாதங்களாக இவருக்கும் அனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது தகராறை வேலுதுரை கண்டு கொள்ளவில்லை. சம்பவத்தன்று அனிதா, காமாட்சியம்மாள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த வேலுதுரை கண்டு கொள்ளாமல் பேசாமல் இருந்தார்.

அதன்பிறகும் வேலுதுரை கண்டு கொள்ளாததால் அனிதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து நடுத்தெருவில் நின்று கொண்டு தன்னுடைய உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் வலி பொறுக்க முடியாமல் அனிதா அலறினார்.

இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து உடல் கருகிய அனிதாவை சிகிச்சைக்காக முதலில் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக அனிதாவை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story