நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது புழல் ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு


நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது புழல் ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 April 2018 3:15 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் புழல் ஏரியில் மூழ்கி பலியானார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(38). இவர்களுக்கு நித்திஷ்(3), தேஜாஸ்ரீ (4) என்ற குழந்தைகள் உள்ளனர். சாந்தி, கணவரை விட்டு பிரிந்து தனது மகன், மகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் நாகாத்தம்மன் நகரில் உயிரிழந்த ஒரு முதியவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட வெங்கடேசன், தனது நண்பர்களான ஜெயக்குமார், விஜயகுமார் ஆகியோருடன் புழல் ஏரியில் ஆலமரம் அருகே குளித்தார்.

அப்போது வெங்கடேசன், ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் செங்குன்றம் போலீசார் அங்கு சென்று வெங்கடேசன் உடலை தேடினர். அதற்குள் இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு வெங்கடேசன் உடலை மீட்டனர். செங்குன்றம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story