கரூர் ரெங்கநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கரூர் ரெங்கநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ரெங்கநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூர்,

கரூர் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அபயபிரதான ரெங்கநாத சாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கோவில் கொடிமரத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டன. சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

தொடர்ந்து சாமி தினமும் காலை மற்றும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் காலை 9.00 மணிக்குள் நடைபெற உள்ளது. மேலும் 30-ந் தேதி காலை அமராவதியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. கோவிலில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் (மே) 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். 

Next Story