காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அரசு அலுவலர்கள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் அரசு அலுவலர்கள் கருப்பு சின்னம் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் காலக்கெடு முடிவடைந்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாநில தலைவர் சண்முக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜராஜன் வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு 4-ம் நிலை ஊழியர்கள் சம்மேளன தலைவர் கணேசன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு காவிரிநீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இணைப்பு சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணிந்திருந்தனர். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் காதர்மீரான் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story