இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் விழா


இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் விழா
x
தினத்தந்தி 22 April 2018 3:40 AM IST (Updated: 22 April 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம், திருப்பத்தூர், அரக்கோணத்தில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தில் உள்ள பள்ளூர், வேட்டங்குளம், சிறுவளையம், கரிவேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் ‘உஜ்வலா திவாஸ்’ திட்டத்தின் கீழ் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பனப்பாக்கம் இண்டேன் கியாஸ் விற்பனையாளர் சாருதிவேல்முருகன் தலைமை தாங்கினார். காவேரிப்பாக்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி, பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அம்சவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இண்டேன் கியாஸ் சென்னை துணை பொதுமேலாளர் தம்பிதுரை கலந்து கொண்டு ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 300 பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்புகளை வழங்கி பேசினார். விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர் குகானந்தம், அரிமா சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜீவரத்தினம், ரோஸ், பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூரில் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் விழா பாரத் கியாஸ் நிறுவனம் மற்றும் ஐஸ்வர்யா கியாஸ் ஏஜென்சி சார்பில், திருப்பத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் நடந்தது. சிறப்பு தாசில்தார் (கியாஸ் இணைப்பு) வி.ரம்யா தலைமை தாங்கினார். ஐஸ்வர்யா கியாஸ் ஏஜென்சி ஏ.ஐஸ்வர்யா வரவேற்றார். பாரதீய ஜனதா கட்சி மாவட்ட பொது செயலாளர் வாசுதேவன், ஈஸ்வர், பண்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன் 100 பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் வழங்கினார்.

இதில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணை செயலாளர் ரா.கண்ணன், டாக்டர் டி.சற்குணபிரபு, உதவும் உள்ளங்கள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் பிரபு நன்றி கூறினார்.

திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் நடந்த விழாவுக்கு ஜி.யுவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஆயில் நிறுவன துணை பொது மேலாளர் வஞ்ஜிகோ கலந்து கொண்டு, 18 ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்புடன் கியாஸ் சிலிண்டர், ரெகுலேட்டர், கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கி, திட்டம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிகாமணி நன்றி கூறினார்.

அரக்கோணம் அருகே தணிகைபோளூரில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை டாக்டர் சங்கர், பெருமாள் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் சொக்கம்மாள் துளசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகரமன்ற முன்னாள் துணைத் தலைவர் கே.வி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டது. இதில் வக்கீல் நேரு, இன்பநாதன், கிருஷ்ணமூர்த்தி, வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் டி.தினேஷ் நன்றி கூறினார். 

Next Story