தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் ‘தட்கல்’ முறையில் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-ல் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் வருகிற ஜுன் 4 முதல் 21-ந் தேதி வரை நடக்க உள்ளது. தனித்தேர்வர்களாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுத ஏப்ரல் 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல் முறை) விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும், பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும், பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலினை இணைத்து தர்மபுரி மாவட்டம் புலிக்கரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களில் தேர்வரே நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு தேர்வு கட்டணத்துடன் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 கூடுதலாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story