கடையில் பூட்டை உடைத்து திருட்டு மேலும் 2 கடைகளில் திருட முயற்சி
பரமத்திவேலூரில், கடையில் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். மேலும் 2 கடைகளில் திருட முயற்சி நடந்துள்ளது.
பரமத்திவேலூர்,
பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் இரவு நேர இட்லி கடை நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 43). இவர் கடையை தினமும் இரவு 7 மணிக்கு திறப்பார். இரவு 10 மணியானதும் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை மூடிவிட்டு செல்வார். இதேபோல் சந்திரசேகர் நேற்று முன்தினம் இரவு தனது இட்லி கடையில் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதேபோல் அதன் அருகில் உள்ள பெட்டிக்கடையின் உரிமையாளர் பழனியம்மாள் (60) மற்றும் டீ கடை உரிமையாளர் செல்வராஜ் (44) ஆகியோரும் வழக்கம்போல் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர்.
திருட்டு
நேற்று காலை இட்லி கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், பெட்டிக்கடை மற்றும் டீ கடை பூட்டுகளை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்து இருப்பதையும் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடைக்கு வந்த உரிமையாளர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, இட்லி கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.200-ஐ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. பெட்டிக்கடை மற்றும் டீ கடையின் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story