முதல்-அமைச்சர் பங்கேற்கும் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்


முதல்-அமைச்சர் பங்கேற்கும் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் 28-ந் தேதி முதல்-அமைச்சர் பங்கேற்கும் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் நாகை டாக்டர் கே.கோபால் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பாசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அசரப்அலி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வாசுகிராம், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர பேரவை செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story