நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
அறந்தாங்கியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி களப்பக்காடு என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். பின்னால் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
இவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் தங்க சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து செல்வி அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வியின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story