மரக்கட்டையால் தாக்கி தொழிலாளி கொலை; தந்தை கைது
வாழப்பாடி அருகே சொத்து தகராறில் மரக்கட்டையால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த அவர் தந்தை கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடி,
வாழப்பாடி அருகே சொத்தை பிரித்து கொடுக்க வலியுறுத்தி குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை மரக்கட்டையால் தாக்கி அவருடைய தந்தையே கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த எம்.பெருமாபாளையம் கோதுமலை அடிவாரம் வடக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(65). இவர்களுக்கு பஞ்சண்ணன்(45). மாரியப்பன்(40) ஆகிய 2 மகன்களும், அங்கம்மாள்(37) என்ற ஒரு மகளும் இருந்தனர்.
இளைய மகன் மாரியப்பனுக்கு, சத்யா(30) என்ற மனைவியும், ஜீவிதா(12), சுகவனேஸ்வரி (10) என்ற 2 மகள்களும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த மாரியப்பன், திருப்பூருக்கு சென்று கூலித்தொழில் செய்து வந்தார். அங்கு அவரோடு பணிபுரிந்த மணி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து எம்.பெருமாபாளையம் கோதுமலை அடிவாரத்திலுள்ள தோட்டத்து வீட்டுக்கு குடிபோதையில் மாரியப்பன் வந்துள்ளார். அங்கு தனது சொத்தை பிரித்து கொடுக்குமாறு, அவருடைய தந்தை அண்ணாமலையிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அண்ணாமலையை மகன் அடித்து விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயி அண்ணாமலை, தனது மகன் மாரியப்பனை அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து தாக்கி உள்ளார். அதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே காயம் அடைந்த தனது மகனை உடனடியாக சைக்கிளில் வைத்து வீட்டுக்கு கொண்டு வந்தார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மாரியப்பன் இறந்து விட்டார்.
சொத்து கேட்டு தகராறு செய்த தனது மகனை அடித்துக்கொலை செய்ததை மறைத்து, குடிபோதையில் தவறிவிழுந்து இறந்து விட்டதாக ஊர்க்காரர்களிடம் கூறி பிணத்தை அடக்கம் செய்து விடலாம் என்று அண்ணாமலை திட்டம் போட்டார். அதன்படி நேற்று அதிகாலை நேரத்தில் தனது மகன் தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். மாரியப்பனின் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால் அதுகுறித்து அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், கொலையுண்ட தொழிலாளி மாரியப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளாளகுண்டம் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாரியப்பனை மரக்கட்டையால் அவருடைய தந்தை அண்ணாமலை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் ஆத்திரமடைந்த தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story