கோடிக்கணக்கில் மோசடி செய்த நடிகை மரியா சூசைராஜ் பெங்களூருவில் கைது
கோடிக்கணக்கில் மோசடி செய்த கன்னட நடிகை மரியா சூசைராஜ் பெங்களூருவில் போலீசாரிடம் சிக்கினார்.
மும்பை,
மாடலாக இருந்து கன்னட திரை உலகில் நுழைந்தவர் நடிகை மரியா சூசைராஜ். மும்பையை சேர்ந்த டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளரான நிரஜ் குரோவர் கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக மரியா சூசைராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை அனுபவித்த பிறகு அவர் கடத்த 2011-ம் ஆண்டு விடுதலையானார். பின்னர் அவர் மும்பையை சேர்ந்த பரோமிதா என்பவருடன் சேர்ந்து வங்கியை விட குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தானேயை சேர்ந்த கட்டுமான அதிபர் சஞ்சய் ரோகிரா என்பவர் நடிகை ரூ.30 கோடி கடன் தருவதாக கூறி தன்னிடம் ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் நடிகை மரியா சூசைராஜ் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் பொது மக்களிடம் ரூ.20 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நடிகை மரியா சூசைராஜ் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நடிகை மரியா சூசைராஜை கைது செய்தனர்.
மேலும் அவரை மும்பை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story