சித்தராமையாவை எதிர்த்து பாதாமியில் போட்டியிட தயார் எடியூரப்பா அறிவிப்பு
முதல்-மந்திரி சித்தராமையாவை எதிர்த்து பாதாமியில் போட்டியிட தயாராக உள்ளதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிட உள்ளார். இத்தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்த நிலையில், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் சித்தராமையா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் பாதாமி தொகுதியில் தேவராஜ் பட்டீல் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், அவருக்கு பி-பாரம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், பாதாமி தொகுதியில் வேட்பாளரின் பெயர் மாற்றப்பட்டது. அதாவது தேவராஜ் பட்டீலுக்கு பதில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பாதாமி தொகுதியை 2-வது தொகுதியாக சித்தராமையா தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் சித்தராமையா இன்று(திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதையடுத்து, முதல்-மந்திரி சித்தராமையாவை எதிர்த்து பாதாமி தொகுதியில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா அல்லது எம்.பி.யாக உள்ள ஸ்ரீராமுலு ஆகியோரில் ஒருவர் களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, எடியூரப்பா சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியிலும், ஸ்ரீராமுலு சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
பாதாமியில் களம் காண்பது குறித்து எடியூரப்பா நேற்று கூறுகையில், ‘பாதாமி தொகுதியில் பா.ஜனதா சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சியின் தேசிய தலைவர் தான் முடிவு செய்வார். என்னை போட்டியிடும்படி கூறினால் நானும் தயாராக உள்ளேன். கட்சி சார்பில் வேறு யாராவது அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் போட்டியிடுவார். இருப்பினும், பாதாமி தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்தும் பலம் கொண்ட வேட்பாளரை இறக்க முடிவு செய்து உள்ளோம்’ என்றார்.
பாதாமி தொகுதியில் களம் இறங்குவது குறித்து எம்.பி. ஸ்ரீராமுலு கூறுகையில், ‘பாதாமி தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவை கட்சி மேலிடம் தான் எடுக்கும். நாங்கள் பா.ஜனதா கட்சியின் ஒழுக்கமான போர்வீரர்கள். கட்சி மேலிடம் என்னை எந்த தொகுதியில் போட்டியிட கூறினாலும் நான் போட்டியிடுவேன்’ என்றார்.

Related Tags :
Next Story