காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுக்கோட்டையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அப்போது திறந்த ஜீப்பில் சென்றும் அவர் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடத்துவது என தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு வந்தார். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திலகர் திடல் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் நேற்று மாலை 4 மணி அளவில் இருந்தே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வரிசையாக கைகோர்த்தபடி அணிவகுத்து நின்றனர்.
இந்நிலையில் மனித சங்கிலியில் பங்கேற்றவர்கள் கைகோர்த்து நின்ற புதிய பஸ் நிலையம் பகுதிக்கு மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு வந்தார். அவர் திறந்த ஜீப்பில் நின்று கையசைத்தபடியே அங்கிருந்து புறப்பட்டார். எம்.ஜி.ஆர். சிலை, அண்ணாசிலை, கீழ ராஜவீதி, பிருந்தாவனம் கார்னர், பழனியப்பா கார்னர், திலகர் திடல், பால் பண்ணை ரவுண்டானா, பி.எல்.ஏ. ரவுண்டானா, அரசு மகளிர் கல்லூரி, உழவர் சந்தை வழியாக சென்றார். அப்போது மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அவர் உற்சாகப்படுத்தினார். பால் பண்ணை ரவுண்டானா அருகில் ஜீப்பில் இருந்து இறங்கிய ஸ்டாலின் மனித சங்கிலியில் இணைந்திருந்த தொண்டர்களுடன் கைகோர்த்தடி சிறிது நேரம் நின்றார். பின்னர் மீண்டும் ஜீப்பில் ஏறி மனித சங்கிலியை பார்வையிட்டார்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் விவசாய சங்க பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 5.40 மணிக்கு அண்ணாசிலை அருகே ஜீப் வந்ததும் அதில் இருந்து இறங்கிய ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு சென்றார்.

Related Tags :
Next Story