கத்தாளம்பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ இடுகாடு கட்ட அனுமதிக்க கூடாது, கலெக்டரிடம் மனு
சாத்தூர் தாலுகாவில் உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ இடுகாடு கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
விருதுநகர்,
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தின்போது சாத்தூர்அருகிலுள்ள கத்தாளம்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கத்தாளம்பட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் கருப்பசாமி, காளியம்மன், அய்யனார், பிள்ளையார் கோவில்கள் அமைந்துள்ளன. ஊருக்கு பொதுவாக உள்ள மயானத்தை நாங்கள் பல காலமாக ஒற்றுமையுடன் பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 16 மிஷினெரிகள் எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை வாங்கி கிறிஸ்தவ இடுகாடு கட்ட முயற்சித்து வருகின்றனர். எங்கள் ஊரில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. அனைவருமே இந்துக்கள். நாங்கள் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதற்கு இடையூறு செய்து, எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் இடுகாடு கட்ட முயற்சிக்கின்றனர்.
நாங்கள் படையல் வைத்து வழிபடும் இடத்தில் எங்கோ இறந்த ஒருவரின் உடலை புதைத்து எங்கள் மத வழிபாட்டை இழிவு செய்ய முயற்சிக்கின்றனர். மேலும் அவர்கள் இடுகாடு அமைக்க இருக்கும் இடத்தில் பஞ்சாயத்துக்கு சொந்தமான 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இடுகாடு அமைக்கப்பட்டால் குடிநீர் மாசு ஏற்படும். எனவே இடுகாடு கட்டுவதற்கு நிரந்தர தடைவிதித்து கிராம ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story