காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., தோழமை கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
பெரம்பலூரில் தி.மு.க., தோழமை கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தி.மு.க., தோழமை கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடந்தது. போராட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், ம.தி.மு.க. மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், மாவட்ட செயலாளர் துரைராஜ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள், திராவிடர் கழகம், எம்.ஜி.ஆர். கழக மாவட்ட பொறுப்பாளர்கள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கத்தினர் உள்பட திரளான பேர் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டம் பெரம்பலூர் காமராஜர் சிக்னலில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடந்தது.

Related Tags :
Next Story