குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
பரமத்திவேலூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
பரமத்திவேலூர் அருகே உள்ள நல்லூரை அடுத்த காளியப்பனூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
நாங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள அருந்ததியர் காலனியில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இதில் இருந்து குழாய் மூலம் நாங்கள் குடிநீர் பெற்று வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் குழாயில் இணைப்பு ஏற்படுத்தி கொண்டு, தன் வீட்டில் உள்ள பூச்செடிகள், வாழைமரம் போன்றவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இதனால் எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகிறோம்.
இது குறித்து நல்லூர் போலீசில் புகார் கொடுக்க போனால், சம்பந்தப்பட்ட நபர் போலீசாக இருப்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதியில் குடிநீர் எடுத்து விடாமல் இருந்து வருகிறார்கள். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, நாங்கள் பல இடங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்து வருகிறோம். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே தாங்கள் முறைகேடான குடிநீர் இணைப்பை துண்டித்து எங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story