காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தோழமை கட்சிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தி.மு.க. தோழமை கட்சிகள் சார்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் சென்னை சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை, சேலம் சாலை, பெங்களூரு சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இதில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. சார்பில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன் குணசேகரன், நகர செயலாளர் நவாப், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் காட்டுப்பட்டி கதிரவன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், நகர தலைவர்கள் ரகமத்துல்லா, வின்சென்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. தலைமையில் தோழமை கட்சிகள் இதுவரை 4 கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் லட்சக்கணக்கான தி.மு.க. தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சிகளை சாராத பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மகத்தான வெற்றி பெறும் வகையில் நடத்தி உள்ளார்கள். பிரதமர் மோடி அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்கும் வரை போராட்டம் தொடரும்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு தமிழினத்தை வஞ்சிக்க முயற்சி செய்கிறது. தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக இதற்கு துணை போகிறது. ஒட்டு மொத்த தமிழக அரசியல் கட்சிகளும் முதல்-அமைச்சர் தலைமையில் காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க தயாராக இருந்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் இன்று தமிழகத்தில் அ.தி.மு.க. தனிமைப்பட்டு கிடக்கிறது.
கிருஷ்ணகிரியில் இன்றைய தினம் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல் முடியும் வரையில் பிரதமர் மோடி தமிழக எதிர்க்கட்சிகளை சந்திக்க விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மனித சங்கில் போராட்டம் நேற்று நடந்தது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் இந்த மனித சங்கிலி நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன், மேற்கு மாவட்ட அவை தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், நகர துணை செயலாளர் திம்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, மாணவர் அணி அமைப்பாளர் சத்யா, பொறியாளர் அணி அமைப்பாளர் ஞானசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில விவசாய அணி துணை தலைவர் லகுமய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story