மாங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கோரி இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
மாங்காடு முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் இளைஞர்கள் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் மாங்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், மாங்காட்டில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமாக நடைபெற்று வந்த நடைமுறைகளை அந்த பகுதியில் உள்ள சிலர் மாற்ற முயற்சித்தனர். அதனால் கிராமத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையின் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு கோவிலில் திருவிழா நடைபெறவில்லை. இதனால் கலெக்டர் தலையிட்டு திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் புக்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் கொடுத்த மனுவில், எனக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் எனது மனைவி கலாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக நான் அன்னவாசல் போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். ஆனால் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி காலை முதல் எனது மனைவி கலாவை காணவில்லை. இதனால் எனது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தவர், அவரை கடத்தி சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து உடனடியாக எனது மனைவி கலாவை மீட்டுத்தர வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

Related Tags :
Next Story