கலெக்டர் அலுவலகத்தில் தலையாட்டி பொம்மைகளுடன் த.மா.கா. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தலையாட்டி பொம்மைகளுடன் த.மா.கா. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் மாநில துணைத் தலைவர்கள் திருப்பதி வாண்டையார், கைலாசம், மாவட்ட தலைவர்கள் குமார், கணபதி, மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலாளர் ராம்மோகன், மாவட்ட செயலாளர் உலகநாதன், வட்ட தலைவர் பத்மநாபன், வட்டார பொதுச் செயலாளர் மரியபிரகாசம் மற்றும் விவசாயிகள் பலர் நேற்று தலையாட்டி பொம்மைகளுடன் வந்தனர்.
பின்னர் அவர்கள், திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மாநில தலைவர் புலியூர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த மாதம்(மே) 3-ந் தேதிக்குள் அமைக்க தமிழக அரசு சட்டரீதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்திற்குரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. 25 லட்சம் ஏக்கரில் கடந்த 3 ஆண்டுகளாக சம்பா சாகுபடியும் இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய, மாநில அரசுகள் தலையாட்டி பொம்மைகளாக இருப்பதை தெரிவிக்கும் வகையில் தான் தலையாட்டி பொம்மைகளை கொண்டு வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்திக்க சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படும். தலையாட்டி பொம்மைகளை கொண்டு செல்லக்கூடாது என்று கூறினர். நாங்கள் என்ன தீவிரவாதிகளா?. உங்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
கர்நாடகத்தில் தமிழர்களை தலைகுனிய வைத்து அடிக்கிறார்கள். கர்நாடகத்தினருக்கு ஆதரவாக அங்குள்ள போலீஸ்காரர்களும் உணர்வால் ஆதரவு கொடுக்கின்றனர். நீங்களும் இதை உணர்ந்து உணர்வால் ஒன்று சேர வேண்டும் என்று போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோஷங்களும் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தலையாட்டி பொம்மைகள் இல்லாமல் விவசாயிகளை மட்டும் கூட்ட அறைக்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அவர்கள், விவசாயிகளின் பிரச்சினையை நேரடியாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி முதல்- அமைச்சரின் கவனத்திற்கு வேளாண்மைத்துறையின் சார்பில் கொண்டு செல்லப்படும் என்று விவசாயிகளிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story