தாம்பரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை


தாம்பரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம், இரும்புலியூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தாம்பரம், 

தாம்பரம், இரும்புலியூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது 48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு தனசேகர் பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்ககதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்கநகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப்பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர். சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Next Story