விஷப்பூச்சி கிடந்த குளிர்பானத்தை குடித்த மூதாட்டி மயக்கம்


விஷப்பூச்சி கிடந்த குளிர்பானத்தை குடித்த மூதாட்டி மயக்கம்
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-25T01:48:01+05:30)

இவர் நேற்று அதே ஊரில் மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். பாதி குடித்த நிலையில் ஏதோ துண்டு, துண்டாக விழுங்குவதை போல் உணர்ந்த பாட்டிலுக்குள் பார்த்தபோது அழுகிய நிலையில் விஷப்பூச்சி கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே உள்ள சிக்கத்தம்பூர் கிராமத்தில் வசிப்பவர் ராமசாமி. தண்ணீர் தொட்டி இயக்குபவர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 65). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே ஊரில் சித்தன் என்பவரின் மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்தார். பாதி குடித்த நிலையில் ஏதோ துண்டு, துண்டாக விழுங்குவதை போல் உணர்ந்த தனலட்சுமி, பாட்டிலுக்குள் பார்த்தபோது அழுகிய நிலையில் விஷப்பூச்சி கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். சிறிது நேரத்தில் அவர் மயக்க மடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த அந்த பகுதி மக்கள், அந்த குளிர்பானம் எங்கிருந்து வாங்கப்பட்டது என்று சித்தனிடம் விசாரித்தனர். அப்போது உப்பிலியபுரம் அருகே உள்ள ஒரு சோடா பேக்டரியில் இருந்து வினியோகம் செய்யப்பட்டதாக சித்தன் தெரிவித்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story