சேத்துமடையில் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்புமனு வாங்க அதிகாரி வராததை கண்டித்து போராட்டம்
சேத்துமடையில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்புமனு வாங்க அதிகாரி வராததை கண்டித்து சமையல் செய்யும் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் முற்றுகையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
ஆனைமலை அருகே சேத்துமடையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., கொ.ம.தே.க., விவசாயிகள் சங்கம் உள்பட பலர் வந்திருந்தனர்.
ஆனால் வேட்புமனுக்களை பெறுவதற்கு அதிகாரிகள் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. தவிர தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சங்க நுழைவு வாயிலில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனை தொடர்ந்து அனைத்து கட்சியினர் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வது என்று கலைந்து சென்றனர். இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:-
சேத்துமடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1386 பேர் ஓட்டு அளிக்க தகுதி உள்ளவராக உள்ளோம். வங்கியில் ரூ.6 கோடி வரை வைப்பு நிதி உள்ளது. வேட்புமனு பெறுவதற்கு அதிகாரி வராதது கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக வைப்பு தொகையை திரும்ப பெற முடிவு செய்து உள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.
இதுபோன்று பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கிக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. முதலில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர். தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனித நேய மக்கள் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் உள்ளே அ.தி.மு.க.வினர் சென்று உள்ளனர். அவர்கள் வந்ததும் நீங்கள் செல்லுங்கள் என்றனர். இதற்கிடையில் அ.தி.மு.க. வினர் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தனர். இந்த நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய விண்ணப்ப படிவம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் விண்ணப்ப படிவம் காலியாகி விட்டதாக கூறியதாக தெரிகிறது. போலீசாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் களை உள்ளே விடவில்லை.
இதைத் தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் முற்றுகையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்றினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதனால் காந்தி சிலை, தபால் நிலையம் வழியாக உடுமலை ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு, பஸ் நிலையம், வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையடிபாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று பல்வேறு கட்சியினர் வந்திருந்தனர். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் வாங்கிய தேர்தல் அதிகாரி திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் அதற்கான ஒப்புகை சீட்டு வழங்காதது மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவதற்கு முன்பே சென்ற அதிகாரியை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் சுல்தான்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகாலிங்கம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துமாணிக்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலுசாமி, கோவை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் மோகன்மந்திராச்சலம், காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உள்பட பல்வேறு கட்சியினர் தேர்தல் அதிகாரியை காணவில்லை என்று சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

Related Tags :
Next Story