ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டரிடம் மனு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் காளிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது ஏர்வாடி அருகே உள்ள சின்ன ஏர்வாடி பகுதியை சேர்ந்த சமுத்ரா கூட்டமைப்பினர் தலைவி அமுதஜோதி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பை உணர்ந்து அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
பல மாநிலங்களில் இந்த ஆலையின் பாதிப்பை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்த நிலையில் தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது எதிர்ப்பின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மே 1-ந்தேதியன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை கிராமங்களில் நடந்த வரவு செலவு அறிக்கை, தணிக்கை, திட்ட அறிக்கை என அனைத்து ஆவணங்களும் கிராம சபை கூட்டத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டத்தினை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும். கிராம மக்கள் நலன் கருதி வைக்கப்படும் கோரிக்கைகளை தீர்மானங்களை பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தீர்மான நகல் கோருபவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Tags :
Next Story