பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் வெள்ளமென திரண்டு தரிசனம்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். வெள்ளமெனத் திரண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தார்கள்.
மதுரை,
மதுரையின் வரலாற்றை பறைசாற்றும் சித்திரைத் திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உலகப்புகழ்பெற்ற உன்னத விழா. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோலாகல நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
பிரசித்தி பெற்ற இந்த சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளத்தில் உள்ள பெருமாள்கோவிலில் 15-ந் தேதி ஆரம்பமானது. மதுரையில், மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 27-ந்தேதி சிறப்பாக நடந்தது. மறுநாள்(28-ந்தேதி) தேரோட்டம் நடைபெற்றது. மாசிவீதிகளில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தேர்களில் பவனி வந்தனர்.
மதுரைக்கு வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அழகர், கள்ளழகர் ஆகிய திருப்பெயர்களைகொண்ட சுந்தரராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கிறார். அங்கிருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்கவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், தங்கை மீனாட்சிஅம்மனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவும் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரைப் பெருவிழாவையொட்டி இந்த ஆண்டு அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 28-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து, நேற்றுமுன்தினம் காலை 6 மணி அளவில் மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் ‘எதிர்சேவை‘ நடந்தது. அழகர் வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் அழகரை எதிர் கொண்டு வர்ணனை பாடல்களை பாடினார்கள். தோல் பைகளில் அடைக்கப்பட்டிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி வரவேற்றார்கள்.
அதைத்தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார். பின்னர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணி அளவில் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்குமேல் கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் ஆயிரம்பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். விடிய விடிய அவருக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தன.
அதிகாலை 3 மணி அளவில் தங்கக் குதிரையில் அமர்ந்தபடி ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார்.
அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்ததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை மிஞ்சும் விதமாக, கள்ளழகரை வரவேற்க நேற்று முன்தினம் இரவே மதுரை நகரெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தல்லாகுளத்தில் இருந்து வழிநெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு வந்தார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர். வைகை ஆற்றிலும் கரையோரங்களிலும், ஆற்றுப் பாலத்திலும் எங்கெங்கும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தன. அழகர் வருவதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கள்ளழகரைச் சுற்றி போலீசார் அரண்போல் அணிவகுத்து வந்தனர். கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.
காலை 5.55 மணியளவில் அதிர்வேட்டுகள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் “பச்சைப்பட்டு” உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா‘ என்று எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணை முட்டியது. செம்புகளில் சர்க்கரையை நிரப்பி தீபம் ஏற்றி அழகருக்கு காட்டி பக்தர்கள் வழிபட்டார்கள்.
ஏற்கனவே, அழகரின் சகோதரரான வீரராகவப் பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். தங்கக்குதிரையில் வந்த அழகரை, வீரராகவப்பெருமாள் வரவேற்று மூன்று முறை அவரை வலம் வந்தார். அழகர் வைகை ஆற்றில் இறங்கிய அந்த பக்திப்பரவசமான காட்சியை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு கண்டு மகிழ்ந்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் வைகை ஆற்றில் இறங்கிய அழகர் சுமார் ஒரு மணிநேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீப, ஆராதனைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார்.
பகல் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து அழகரை வழிபட்டனர். அங்கு அவர் மீது கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியளவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் பக்தி உலா வருகிறார். அதன்பின் சேஷ வாகனத்தில் எழுந்தருளி 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு அனுமார் கோவிலில் அழகர் எழுந்தருள்கிறார்.
இன்று இரவு ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருள்கிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகனாவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் அழகர் காட்சி தருகிறார்.
நாளை (புதன்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வர உள்ளார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி மறுநாள்(3-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார்.
அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10.30 மணியளவில் இருப்பிடம் சென்று அடைகிறார்.

Related Tags :
Next Story