வருமான வரித்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


வருமான வரித்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2018 4:57 AM IST (Updated: 1 May 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

கால் அகற்றப்பட்டதால் விரக்தி அடைந்த வருமான வரித்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புனே,

புனே மாவட்டம் அகுர்தி பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் சந்திரஷ்வர் பிரசாத்(வயது32). இவர் புனே வருமான வரித்துறை அலுவலகத்தில் ஊழியராக இருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இவரது ஒரு கால் டாக்டர்களால் அகற்றப்பட்டது.

இதனால் அவர் தனது அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட மிகவும் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படவில்லை. மேலும் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி குரல் கொடுத்தற்கும் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பப்லு குமார் சந்திரஷ்வர் பிரசாத் அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பப்லு குமார் சந்திரஷ்வர் பிரசாத் தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்து இருந்த கடிதத்தையும் அவர்கள் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் தனது உடல்நல குறைபாடால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story