ஈரோடு மாவட்டத்தில் மே தின விழா ஊர்வலம்
ஈரோடு மாவட்டத்தில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மே தின விழாவையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி அந்தியூர் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தொழில் சங்க செயலாளர் குமரவேல் தலைமை தாங்கினார். தலைவர் லோகநாதன், மாதன், கிளை மேலாளர் பழனிச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றிவைத்து பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து ஊர்வலமும் நடைபெற்றது.
இதில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், பாலுச்சாமி, பழனிச்சாமி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே சுமைதூக்கும் தொழிலாளர்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம், கொடியேற்று விழா மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுமை பணி தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பொன்னுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பி.சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பி.மகேந்திரன், எம்.சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி அலுவலகத்தில் மோகனசுந்தரம் கொடியேற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் மா.நாகப்பன் அனைவருக்கும் துண்டு வழங்கினார். இதில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.ராஜ்குமார், ஒன்றிய துணை செயலாளர் கண்ணுசாமி மற்றும் கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.
அண்ணா சுமை தூக்குவோர் மற்றும் கை வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னிமலை குமரன் சதுக்கத்தில் நடந்த விழாவுக்கு சுமை தூக்குவோர் சங்கத்தை சேர்ந்த கண்ணுசாமி தலைமை தாங்கி பேசினார். பின்னர் ஊர்வலம் நடைபெற்றது. காங்கேயம் உ.தனியரசு எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
சத்தியமங்கலம் கோவை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின கொண்டாடப்பட்டது. தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். போக்குவரத்து கழக முன்னாள் அலுவலர் முத்து தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் சத்தி கிளை செயலாளர் எம்.மாரிமுத்து முன்னாள் தலைவர் மணிகன்டன் செயலாளர் என்.பிரகாசம், பொருளாளர் எஸ்.தங்கம் உள்பட தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இதுபோல சத்தி எ.ஐ.டி.யூ.சி சார்பில் கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, வரதம்பாளையம், பஸ் நிலையம், ரங்கசமுத்திரம், வடக்குப்பேட்டை என நகர் முழுவதும் 37 இடங்களில் மாவட்ட துணைச்செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் கொடியேற்றினார். விழாவில் மாதர் சங்க தலைவர் மல்லிகா வாசு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜா உள்பட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஈரோடு புறநகர், மாநகர் மாவட்ட சார்பில் சத்தி-கோவை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் நடந்த விழாவுக்கு தொழிற்சங்க தலைவர் மணி என்கிற சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார், மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, சத்தி நகர செயலாளர் டி.கே.ஈஸ்வரன் ஒன்றிய செயலாளர் வி.எம்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளர் வி.செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். மேலும் இந்த கூட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
சிவகிரி பாலமேட்டுபுதூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை நிறுவனத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் சங்க கவுரவ தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, கொடி ஏற்றி வைத்தார். சங்க தலைவர் சண்முகசுந்தரம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில், தொழிற்சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. பெருந்துறை பயணியர் விடுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சந்தை பேட்டை, போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு வழியாக சென்று, அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். பழனிசாமி, பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், எஸ்.பெரியசாமி, கே.பி.பரமசிவம், வி.பி.கல்யாணசுந்தரம், நல்லசிவம், ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story