மே தின விழா கொண்டாட்டம் தொழிற்சங்கங்கள், கட்சிகள் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்
புதுச்சேரியில் தொழிலாளர் தினமான மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு தொழிற்சங்கங்கள், கட்சிகள் சார்பில் கொடியேற்றி விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி,
மே தினத்தை முன்னிட்டு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுதேசி, பாரதி மில்கள், புதிய பஸ் நிலையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை, உள்ளிட்ட 20 இடங்களில் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கொடியேற்றி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் அண்ணா அடைக்கலம், துணைத்தலைவர் காயரோகணம், துணை செயலாளர் ராமமூர்த்தி, மற்றும் தெற்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று மே தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் தலைமை தாங்கி கட்சிகொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எம்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. நேரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை சாலைப்போக்குவரத்து கழக பணிமனை மற்றும் தாமரை நகர் ஆட்டோ ஸ்டாண்டில் நடந்த மே தின நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியேற்றினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பானந்தம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிறுவர்- சிறுமிகளுக்கு நோட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன.
புதுவை லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் தொழிற்சங்க கொடியை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஏற்றினார். மேலும் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், ராமதாஸ், வக்கீல் பிரிவு செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் புதுவை புதிய பஸ் நிலையத்தில் நடந்த மே தினவிழாவில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அபிசேகம் கொடியேற்றினார். பொதுச்செயலாளர் தினேஷ்பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சி.ஐ.டி.யு. சார்பில் நேரு வீதி இந்தியன் காபி அவுஸ் அருகே நடந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் கலந்துகொண்டு கொடியேற்றி னார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், ராமசாமி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
படைப்பாளி மக்கள் கட்சியினர் புதுவை-கடலூர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாநில தலைவர் தங்கம், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் வரதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விஸ்வகர்மா முன்னேற்ற கழகத்தினர் தலைவர் மூர்த்தி தலைமையில் உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் சரவணன், பொருளாளர் சேகர், துணைத்தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை மாநில ஐ.என்.டி.யு.சி. சார்பில் மே தின விழா புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்றது. விழாவில் ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிம்மன், ஞானசேரகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுவையில் உள்ள பல தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோ ஸ்டேண்டுகளில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
ஜிப்மர் தேசிய முக்கியத்துவ மருத்துவமனை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மே தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். துணை செயலாளர் பிரபாகரன், பொதுச் செயலாளர் ஆரோக்கிய கலைமதி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மில் தொழிலாளர் சங்கம் சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாரதி மில்லில் நடந்த மே தின விழாவில் சங்க துணை தலைவர் தேவராஜ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குணசேகரன், தேசிங்கு, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவை மாநில கட்டிடத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வழுதாவூர் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற மே தின விழாவில் சங்க மாநில துணைத்தலைவர் கனகசபை சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நாராயணசாமி, தேசிங்கு, கதிரவன், ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கல்மேடுபேட், அம்மாநகர், வேல்ராம்பேட் உள்பட பல்வேறு கிளை அலுவலகங்களிலும் மே தினம் கொண்டாடப்பட்டது.

Related Tags :
Next Story