மும்பை அரபிக்கடலில் அமையும் சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் மேலும் 2 மீட்டர் அதிகரிப்பு


மும்பை அரபிக்கடலில் அமையும் சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் மேலும் 2 மீட்டர் அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 May 2018 5:50 AM IST (Updated: 2 May 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

மும்பை அரபிக்கடலில் அமையும் சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் மேலும் 2 மீட்டர் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் இருந்து சுமார் 1½ கி.மீ. உள்ளே அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடம் சுமார் ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. சத்ரபதி சிவாஜி குதிரையில் வீற்றிருப்பது போல 192 மீட்டர் உயரத்திற்கு பிரமாண்ட சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் சிவாஜி சிலையின் உயரம் 210 மீட்டராக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவாஜி சிலையின் உயரம் ேமலும் 2 மீட்டர் அதிகரிக்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘தற்போது சீனாவில் ஸ்பிரிங் கோவிலில் தான் புத்தருக்கு 208 மீட்டர் உயரத்தில் சிலை உள்ளது. இதுதான் உலகிலேயே உயரமான சிலையாகும். அந்த சிலையின் அடிப்பகுதியில் சில கட்டுமானங்கள் செய்து அதன் உயரம் 210 மீட்டராக உயர்த்தப்படுகிறது. எனவே உலகிலேயே உயரமான சிலை என்ற பெருமையை அடைய சிவாஜி சிலையின் உயரத்தை 212 மீட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. அரபிக்கடலில் சிவாஜி சிலை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன’ என்றார். 

Next Story