மராட்டிய தின கொண்டாட்டம்: கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடி ஏற்றினார்


மராட்டிய தின கொண்டாட்டம்: கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 2 May 2018 5:52 AM IST (Updated: 2 May 2018 5:52 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய தினத் தையொட்டி தாதர் சிவாஜி பார்க்கில் நடந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடி ஏற்றினார். தியாகிகள் நினை விடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மரியாதை செலுத்தினார்.

மும்பை,

மராட்டிய தினம் ஆண்டுதோறும் மே 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மராட்டிய தினத்தையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் அரசு சார்பில் விழா நடந்தது. விழாவில் கலந்துகொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடியை ஏற்றினார். இதையடுத்து கவர்னர் திறந்த ஜீப்பில் சென்று மைதானத்தை சுற்றி வந்தபடி போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரிவினரின் அணிவகுப்பு மரியாைதயை ஏற்றுக் கொண்டார். பின்னர் கவர்னர் மராட்டிய தின உரையாற்றினார். இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த விழாவில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதேபோல மராட்டிய தினத்தையொட்டி உத்தாத்மா சவுக்கில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் மும்பை மாநகராட்சி சார்பில் சி.எஸ்.எம்.டி.யில் உள்ள அதன் தலைமையகத்தில் நடந்த மராட்டிய தின விழாவிலும் கவர்னர், முதல்-மந்திரி மற்றும் மாநில மந்திரிகள் கலந்துகொண்டனர். இதுதவிர மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்களிலும் மராட்டிய தினம் கொண்டாடப்பட்டது. 

Next Story