அன்னவாசல், ஆவுடையார்கோவில் ஒன்றியங்களில் மே தின கிராமசபை கூட்டம்


அன்னவாசல், ஆவுடையார்கோவில் ஒன்றியங்களில் மே தின கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 4:15 AM IST (Updated: 3 May 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

மே தினத்தையொட்டி அன்னவாசல், ஆவுடையார்கோவில் ஒன்றியங்களில் கிராமசபை கூட்டம் நடந்தது.

அன்னவாசல்,

அன்னவாசல் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிங்காரவேல் மற்றும் நாகராஜன் வழிகாட்டுதலின்படி மே தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாக திட்ட அறிக்கை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் அம்மாசத்திரத்தில் கிராம சபை கூட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. மேலும் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கட்சியின் கொடியினை மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் ஏற்றி வைத்தார், இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருப்பெருந்துறை மற்றும் புண்ணியவயல் ஊராட்சியில் வட்டாரவளர்ச்சி அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலும், பலவரசன் ஊராட்சியில் புதுக்கோட்டை மண்டல அதிகாரி(உதவி திட்டம்) சேகர் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மண்டல அதிகாரி சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல ஆவுடையார்கோவிலில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

அறந்தாங்கி

மே தினத்தை முன்னிட்டு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் அறந்தாங்கி நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, அண்ணாசிலை, பட்டுக்கோட்டை சாலை, தலைமை தபால்நிலையம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் தொழிற்சங்க கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி நகரக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story