கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வட்ட செயலாளர்கள் சிதம்பரம் (மயிலாடுதுறை), செல்வராஜ் (தரங்கம்பாடி), சண்முகம் (குத்தாலம்), வட்ட தலைவர்கள் அருள்மணி (மயிலாடுதுறை), வேல்முருகன் (தரங்கம்பாடி), நாகராஜன் (சீர்காழி), செல்வராஜ் (குத்தாலம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story