தொடர் மழை எதிரொலி: ஊட்டி மத்திய பஸ் நிலையம் குளமாக மாறிய அவலம்
தொடர் மழை காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையம் குளமாக மாறி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குளிர்ந்த காலநிலை கொண்ட மாவட்டமாக உள்ளது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காக்கள், மலைரெயில், அழகிய பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன்காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஊட்டிக்கு இயக்கப்படுகின்றன.
இதேபோல் திருச்சி, சேலம், மதுரை, கோபிசெட்டிப்பாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் நடுத்தர சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களிலேயே வந்து செல்கிறார்கள். இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் கடந்த பல மாதங்களாக மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பஸ் ஏற வரும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குழி இருப்பது தெரியாமல் முதியவர்கள் தடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஊட்டி மத்திய பஸ் நிலையம் போதிய பராமரிப்பு இன்றி விடப்பட்டு உள்ளதால் பஸ் நிலையம் பழுதடைந்து உள்ளதுடன், ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் ஏறுவதற்கு பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலைய வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அரசு பஸ்கள் குண்டும், குழியுமான இடங்களில் இயக்கப்படுவதால் பழுதடைய வாய்ப்பு உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த ஆண்டு நடந்த மலர் கண்காட்சியின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டி பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்து இருந்தார். மேலும் கூடுதலாக ரூ.2¼ கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஊட்டி பஸ் நிலையத்தை சீரமைக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதிகாரிகள் அதற்கான பணிகளை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையம் முழுமையாக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்குகிறது. ஆனால், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பஸ் நிலையங்கள் நகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் ஊட்டி மத்திய பஸ் நிலையம் இயங்குவதால், பஸ் நிலையத்தை போக்குவரத்து கழக அதிகாரிகள் சீரமைப்பதில்லை. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு புதிதாக வரும் பயணிகள் அழகான ஊட்டியில் இப்படி ஒரு பஸ் நிலையமா? என்று கேள்வி எழுப்புகின்றனர். எனவே, அவல நிலையில் காட்சி அளிக்கும் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story