அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

அ.தி.மு.க.வை அழிக்க நினைப்போர் அழிந்து போவார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசி,
மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருத்தங்கலில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பொன்சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
எப்போது அ.தி.மு.க. ஆட்சி கலையும் எப்போது ஆட்சியை பிடிக்கலாம் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். அது ஒருபோதும் நடக்காது. தனது கட்சியின் தலைவர் பதவியை கூட பிடிக்க முடியாத ஸ்டாலின் எப்படி முதல்-அமைச்சராக முடியும். அவருக்கு அந்த யோகம் கிடையாது.
மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய அரசோடு ஆதரவான நிலையில் உள்ளோம். காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை. இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்கள் பிரச்சினைக்காக போராடும்.
தி.மு.க.விற்கு கொள்கையும் கிடையாது. லட்சியமும் கிடையாது. அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, தலைமை கழக பேச்சாளர் ஆவடிகுமார், அண்ணா தொழிற்சங்கமாவட்ட செயலாளர் கே.கே.பாண்டியன், மண்டல செயலாளர் குருசாமி, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் திருத்தங்கல் சீனிவாசன், பேரவை நகர செயலாளர் ரமணா, கூட்டுறவு வங்கிதலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் கோவில்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, சேதுராமன், ரவிச்செல்வம், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story