பரமக்குடி அருகே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க.வினர் கருப்புக்கொடி, பா.ஜ.க.வினரை நோக்கி செருப்பு, கல்வீச்சு
பரமக்குடி அருகே, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்கோஷமிட்ட பா.ஜ.க.வினரின் கார்களை நோக்கி செருப்பும், கற்களும் வீசப்பட்டன.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் மத்திய அரசு சார்பில் ஆதிதிராவிட சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய கிராமங்களில் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம், வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், எல்.இ.டி. பல்புகள் வழங்கும் திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம், மின் இணைப்பு வழங்கும் திட்டம், தடுப்பூசி போடும் திட்டம், சுகாதார திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவை முறையாக 100 சதவீதம் செயல்படுத்தப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று மதுரையில் இருந்து கார் மூலம் கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்தார்.
அப்போது பரமக்குடி- பார்த்திபனூர் விலக்குரோட்டில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமை யிலும், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் முன்னிலையிலும் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு தன்னிச்சையாக இதுவிஷயத்தில் முடிவெடுக்கமுடியாது என்று, மதுரையில் கருத்து தெரிவித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் வாகனத்தை பின் தொடர்ந்து கார்களில் வந்த பா.ஜ.க.வினர் கார்களை நிறுத்தி, கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரை எதிர்த்து கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் பா.ஜ.க.வினரின் கார்கள் மீது கற்கள், செருப்பு போன்றவற்றை சரமாரியாக வீசித்தாக்கினர். மேலும் தாங்கள் கையில் வைத்திருந்த கருப்புக் கொடிகளையும் அவர்களை நோக்கி எறிந்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உடனே போலீசார் விரைந்து வந்து அங்கிருந்து தி.மு.க.வினரை அப்புறப் படுத்தி, பிரச்சினை ஏற்படாமல் தடுத்தனர்.

Related Tags :
Next Story