ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பிவண்டி கோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக பிவண்டி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மாதம் பிவண்டி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இந்தநிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஆஜராகவில்லை என அவரது வக்கீ்ல்கள் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story