27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்: எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனராக ஆர்.ஏ.ராஜீவ் நியமனம்


27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்: எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனராக ஆர்.ஏ.ராஜீவ் நியமனம்
x
தினத்தந்தி 3 May 2018 6:45 AM IST (Updated: 3 May 2018 6:45 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனராக ஆர்.ஏ.ராஜீவ் நியமிக்கப்பட்டார்.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில அரசு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இவர்களில் குறிப்பாக மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும(எம்.எம்.ஆர்.டி.ஏ.) கமிஷனராக இருந்த யு.பி.எஸ். மதான் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். எம்.எம்.ஆர்.டி.ஏ. புதிய கமிஷனராக நிதித்துறை (செலவு) முதன்மை செயலாளர் ஆர்.ஏ.ராஜீவ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை தகவல் தொழில்நுட்ப இயக்குனராக இருந்த சங்கரநாராயணன் மாநகராட்சி நிர்வாகத்துறை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். பி.வேல்ராசு மராட்டிய ஜீவன் பிரதிகரன் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி மகாராஷ்டிரா சதன் முதன்மை செயலாளராக இருந்த லோகேஷ் சந்திரா சிட்கோ துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், சிட்கோ துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த கஹராணி முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

மிராபயந்தர் மாநகராட்சி கமிஷனராக இருந்த பி.ஜி.பவார் ஜல்னா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே நேற்று எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனராக ஆர்.ஏ.ராஜீவ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Next Story