‘ஜெய்கா’ புறநோயாளிகள் பிரிவை பார்வையிட்ட ஜப்பான் நாட்டு குழு
எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டுள்ள ‘ஜெய்கா’ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை ஜப்பான் நாட்டு குழுவினர் பார்வையிட்டனர்.
சென்னை,
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ‘ஜெய்கா’ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு ஒரு ஆண்டு நிறைவானதை முன்னிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஜப்பான் நாட்டு குழுவினருடன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஜப்பான் நாட்டு தூதர் கொஜிரோ உச்சியாமா, ‘ஜெய்கா’ இந்தியாவின் மூத்த பிரதிநிதி தோரு உமாச்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்ட ஜப்பான் நாட்டு குழுவினர், ‘தமிழகத்தில் சுகாதார சேவைகள் சிறப்பாக உள்ளன’ என்று பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியின்போது குழந்தைகள் அவசரகால சிகிச்சைகளுக்கான பயிற்சி மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து புறநோயாளிகளுக்கு மோர், ஓ.ஆர்.எஸ். குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இணைந்து ரூ.90 கோடி மதிப்பில் உருவான ‘ஜெய்கா’ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் இதுவரை 5¾ லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். 17 நகரங்களில் உள்ள 11 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 10 மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.1,634 கோடி நிதி வழங்கவுள்ளது.
‘டானி’ நிதி மூலம் ரூ.3.60 கோடி மதிப்பில் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அவசரகால சிகிச்சைகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.20¾ கோடியில் பச்சிளம் குழந்தைகளுக்கான நவீன இதய-நெஞ்சக நோய்கள் அறுவை அரங்கம் மற்றும் ரூ.10.07 கோடியில் மரபியல் நோய் சிகிச்சைக்கான உயர்தர ஆய்வகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story