கணவன்-மனைவி மீது தாக்குதல் விவசாயி கைது


கணவன்-மனைவி மீது தாக்குதல் விவசாயி கைது
x
தினத்தந்தி 4 May 2018 3:45 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி குடியான தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி இளையராணி. சம்பவத்தன்று அந்த பகுதியில் 2 பேர் தகராறு செய்து கொண்டு இருந்தனர். அவர்களை ராஜேந்திரன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தமல்லி குடியான தெருவை சேர்ந்த விவசாயியான வைரவமூர்த்தி, சித்தமல்லியை சேர்ந்த முத்து ஆகிய 2 பேரும் சேர்ந்து, ராஜேந்திரனிடம் நீ எதற்காக சமாதானம் செய்தாய்? என்று கேட்டனர். இதனால் ராஜேந்திரன், வைரவமூர்த்தி, முத்து ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வைரவமூர்த்தி, முத்து ஆகிய 2 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை தாக்கினர். இதனை தடுக்கவந்த இளையராணியையும் அவர்கள் தாக்கினர். இதில் ராஜேந்திரன், இளையராணி ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து இளையராணி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரவமூர்த்தியை கைது செய்தனர். தப்பி ஓடிய முத்துவை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story