பெண் விஷம் குடித்து தற்கொலை


பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2018 3:45 AM IST (Updated: 4 May 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை.

தா.பழூர்,

தா.பழூரை அடுத்த தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 33) குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தா.பழூர் சென்று வருவதாக கூறி விட்டு சென்ற ஜெயந்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பிள்ளையார்குளம் கிராமத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக, அவரது தந்தை சுந்தரமூர்த்திக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த அவர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் ஜெயந்தியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஜெயந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story