குமாரபாளையத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு
குமாரபாளையத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்தார்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62), வியாபாரி. இவர் குமாரபாளையம் மேற்கு காலனியில் மெத்தை மற்றும் தலையணை தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்கு அங்குராஜ் என்ற மகனும், துளசி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஆறுமுகம், தனது மனைவி மல்லிகாவை அழைத்துக் கொண்டு மொபட்டில் பள்ளிபாளையத்தில் உள்ள மகள் துளசி வீட்டுக்குச் சென்றார். பின்னர் ஈரோடு சென்றுவிட்டு வருவதாகவும், வரும்போது பேரன் பேத்திகளை குமாரபாளையம் அழைத்துச் செல்வதாகவும் கூறி சென்றுள்ளனர். அங்கிருந்து சிறிது தூரம் சென்றவுடன் மொபட்டில் கணவருடன் சென்ற மல்லிகா திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்த போது மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகன் அங்குராஜ் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அப்போது ஆறுமுகம் தன்னை விட்டு மனைவி போய்விட்டாளே என அழுதுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரும் இறந்து விட்டார்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி மறைவுக்கு அங்கிருந்த உறவினர்கள் அப்பகுதி மக்கள் அனைவரும் கண்கலங்கினர். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் எடுத்து சென்று குமார பாளையத்தில் தகனம் செய்தனர்.

Related Tags :
Next Story