கதவணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி; மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றம்


கதவணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி; மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 3 May 2018 10:52 PM GMT (Updated: 3 May 2018 10:53 PM GMT)

கோனேரிப்பட்டியில் கதவணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்மாபேட்டை,

கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி மின்சாரம் தயாரிக்க தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அம்மாபேட்டை அருகே கோனேரிபட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது அதை தேக்கி வைத்து அந்த கதவணை மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக அங்கு 2 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 2 எந்திரங்கள் மூலம் தலா 15 மெகாவாட் மின்சாரம் என 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த எந்திரங்களின் பராமரிப்பு பணிகள் ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையத்தில் தொடங்கியது.

இதையொட்டி அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடல்போல் காட்சியளிக்கும் கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையம், தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளிக்கிறது.

Next Story