தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற மலையேறும் வீரர்கள் 12 பேர் கைது


தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்ற மலையேறும் வீரர்கள் 12 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 4:46 AM IST (Updated: 4 May 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

சத்தாராவில் சயாத்ரி புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த வனப்பகுதியின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சம்பவத்தன்று மலையேறும் வீரர்கள் 12 பேர் எந்தவித அனுமதியும் பெறாமல் 20 கி.மீ. வரையிலும் காட்டுக்குள் சென்று உள்ளனர்.

புனே,

தடைசெய்யப்பட்ட பகுதி என பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தும், அவர்கள் சட்டவிரோதமாக உள்ளே சென்று இருக்கின்றனர்.

வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைதானவர்கள் புனேயை சேர்ந்த துஷார் நிகம், சச்சின் கெய்க்வாட், பாலச்சந்திர கோசாவி, ராகேஷ், மோகன் சுண்டே, வித்தோல், அபிஜித், மனிஷ் குல்கர்ணி, கிரண் தவாரே, சந்தீப் பாட்டீல், சுபாஷ் பாரடே, சதாசிவ் அம்ராதே ஆகியோர் என்பது தெரியவந்தது. 

Next Story