தவறான தீ விபத்து எச்சரிக்கையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட துபாய் விமானம்


தவறான தீ விபத்து எச்சரிக்கையால் அவசரமாக தரையிறக்கப்பட்ட துபாய் விமானம்
x
தினத்தந்தி 4 May 2018 4:56 AM IST (Updated: 4 May 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

தவறான தீ விபத்து எச்சரிக்கையால் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மும்பை,

மும்பையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் துபாயிக்கு 178 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் இன்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்தநிலையில் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் கார்கோ பகுதியில் தீ விபத்து எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதுகுறித்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் மீண்டும் விமானத்தை தரையிறக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் விமானம் தரையிறங்கிய உடன் அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. விமான கார்கோ பகுதியில் தீ விபத்து அலாரம் தவறாக ஒலித்தது தெரியவந்தது.

இந்தநிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 9.30 மணியளவில் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டு சென்றது. 

Next Story