சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா
சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
சங்கரன்கோவில்.
சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வருசாபிஷேக விழா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் 10–வது வருசாபிஷேக விழா கடந்த 1–ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு அன்று காலை 8.30 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், கணபதிஹோமம், கஜபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் சவுபாக்கிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், அங்கூரார்ப்பணம், ரக்சாபந்தனம், வேதிக்கார்ச்சனை, அக்னிகார்யம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 2–ந் தேதி காலை 7மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு, காலை 9 மணிக்கு மேல் சித்திவிநாயகர், சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயணர், கோமதிஅம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சண்முகர், வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு அன்னதானம்
பின்னர் 10ம் ஆண்டு வருசாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா நடைபெற்றது. அதை முன்னிட்டு சிறப்பான முறையில் சப்பரங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த வருசாபிஷேக விழாவில் கட்டளைதாரர்கள் ஏ.வி.கே. கல்வி குழுமங்களின் சேர்மன் அய்யாத்துரைபாண்டியன், அல்லிராணி அய்யாத்துரைபாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story