மாவட்ட செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து பெண் மானபங்கம் + "||" + England girl sexual harassment at Mumbai airport

மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து பெண் மானபங்கம்

மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து பெண் மானபங்கம்
மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து பெண்ணை மானபங்கம் செய்த கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,

இங்கிலாந்தை சேர்ந்த 32 வயது பெண்ணின் பெற்றோர் மும்பையில் வசித்து வருகின்றனர். எனவே அவர் கடந்த சில நாட்களுக்கு முன் பெற்றோரை பார்க்க மும்பை வந்தார். பின்னர் சம்பவத்தன்று துபாய் வழியாக இங்கிலாந்து திரும்புவதற்காக அந்த பெண் மும்பை விமானநிலையத்தில் உள்ள பணமாற்று மையத்தில் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்.


அப்போது அவரது பின்னால் நின்ற வாலிபர் ஒருவர் திடீரென இங்கிலாந்து பெண்ணை தொட்டு மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உதவிகேட்டு சத்தம்போட்டார்.

பணமாற்று மையத்தில் இருந்த ஊழியர்கள் அந்த வாலிபரை பிடித்து விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் தகவல் அறிந்து சென்ற போலீசார் இங்கிலாந்து பெண்ணை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த இம்ரான் அப்துல் ஹாடி பார்வசி (வயது28) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.