வெளி மாநிலங்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை


வெளி மாநிலங்களுக்கு ‘நீட்’ தேர்வு எழுத செல்லும்  மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை
x
தினத்தந்தி 6 May 2018 5:00 AM IST (Updated: 6 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் ‘நீட்‘ தேர்வு எழுத செல்லும் தூத்துக்குடி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி

மருத்துவ படிப்பில் சேர்கின்ற மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு எழுத அரசு சார்பில் தமிழக மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டது. தற்போது தமிழக மாணவர்கள் சிலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அப்படி வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணமாக அரசு ரூ.1,000 அறிவித்து உள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெளிமாநிலங்களில் ‘நீட்‘ தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. நேற்று காலையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முதற்கட்டமாக 7 மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கினார்.

மருத்துவ படிப்பில் சேர்கின்ற மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வு கட்டாயம் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. தமிழக அரசு அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு ‘நீட்‘ தேர்வு எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணமாக தமிழக அரசு ரூ.1000 வழங்கி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மாவட்ட கழகத்தை அணுகுகின்ற மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கியதுடன் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி உள்ளோம். பெரும்பாலான மாணவர்கள் எர்ணாகுளம் சென்று இருப்பதால் அங்கு செய்தி துறை சார்பில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளை அனுப்பி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளோம்.

நிகழ்ச்சியின் போது அ.தி. மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு எர்ணாகுளத்திற்கு, ‘நீட்‘ தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்சில் 20 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சென்றனர்.

Next Story