என்ஜினீயரிங் பணி காரணமாக 11-ந் தேதி முதல் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 21 நாட்கள் ரத்து
என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 21 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்,
திருச்சி கோட்ட ரெயில்வே அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருச்சி-தஞ்சை-திருச்சி பயணிகள் ரெயில்(வண்டி எண் 76824, 76827) வருகிற 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில்(வண்டி எண் 16233, 16234) வருகிற 11-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 21 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில்(வண்டி எண் 56824), கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி-நாகூர் இடையிலான பயணிகள் ரெயில்(வண்டி எண் 76854) வருகிற 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும்.
காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில்(வண்டி எண் 56711) 30 நிமிடம் திருவாரூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story