மாவட்ட செய்திகள்

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி + "||" + Auto Motorcycle Clash Young child killed

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
காஞ்சீபுரத்தில் ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கிழக்கு பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் தரணி என்கிற ரஞ்சித்குமார் (வயது 19). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் காந்திரோட்டில் இருந்து டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


அப்போது பின்புறம் வந்த ஆட்டோ இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.