காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம்


காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 May 2018 10:15 PM GMT (Updated: 6 May 2018 7:08 PM GMT)

காரியாபட்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி கிராமமக்கள் உண்ணாவிரதபோராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி,

காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. அப்போது அல்லாளப்பேரி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் தலைமையில் 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சத்திரம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த 11 பேரும் மனு தாக்கல் செய்தனர். கடந்த 2- ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. பரிசீலனையில் எந்த முடிவும் அறிவிக்காமல் தேர்தல் அலுவலர் சென்று விட்டார். பின்னர் மறுநாள் (3-ந் தேதி) எந்த முடிவு என்றாலும் அருப்புக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம் வாருங்கள் என்று சொல்லி அலுவலகத்தை அடைத்து விட்டு சென்று விட்டார். தற்போது 11 பேர் மட்டுமே தேர்வு செய்துள்ளதாக வந்த தகவலை அடுத்து ஆத்திரமடைந்த அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி கிராமமக்கள் ஒன்று சேர்ந்து அல்லாளப்பேரி மாணிக்க வாசகர் கோவில் முன்பு உண்ணாவிரதபோராட்டம் நடத்தினர். முறைகேடாக நடைபெற்ற சத்திரபுளியங்குளம் கூட்டுறவு வங்கி தேர்தலை ரத்து செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story